தமிழகம் முழுவதும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. இந்த சாலை விபத்துகளை தடுப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வது, அதி வேகத்தில் செல்வதை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. எனினும் வாகன ஓட்டிகள் சாலையில் மனம் போன போக்கில் செல்கின்றனர்.
தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு நடந்த 55,713 வாகன விபத்துகளில் 14,912 பேர் இறந்துள்ளதாக தமிழக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது முந்தைய ஆண்டை விட 6,852 பேர் அதிகம் ஆகும். தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு கடந்த 5 ஆண்டுகளாக படிப்படியாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. ஹெல்மெட் அணியாதது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேகப் பயணம் இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். ஆகவே விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்க என்ன செய்யலாம்?.. என்று கேள்வி எழுந்துள்ளது.