தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்திலும் அவர்களின் கல்விக்கு உதவுவதற்காகவும் அரசு அவ்வப்போது பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவ்வகையில் தமிழகத்தில் உள்ள 11 ஆம் வகுப்பு அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழ் மொழி திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. அதில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் அடிப்படையில் அனைத்து வினாக்களும் கேட்கப்பட்டன.
இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் அனைவருக்கும் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் இரண்டு வருடங்களுக்கு மாதம் தோறும் 1500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்மொழி இலக்கிய தேர்வின் முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார். அதில் 2.50 லட்சம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் இவர்கள் அனைவருக்கும் 1500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.