மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று (பிப்ரவரி 16) மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து (பிப்…17) தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும், பிப்ரவரி 18, 19, 20ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். மேலும் காலை நேரங்களில் பனி மூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Categories