Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 ஆயிரம் அரசு கட்டிடங்கள்…. கொரோனா வார்டாக மாற்றம்….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பலத்த  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் அதிவேகமாக கொரோனா பரவி வருவதால், அதனைத் தடுக்க 20,000 அரசு கட்டிடங்களை கொரோனாவால் வார்டு ஆக மாற்ற பொதுப்பணித்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், வீட்டு வசதி மற்றும் குடியிருப்பு வாரிய கட்டிடங்கள் உள்ளிட்ட 20 ஆயிரம் கட்டிடங்கள் கொரோனா வார்டு ஆக மாற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |