Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 மாநகராட்சிகளில் புதிய பணியிடங்கள்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளின் மக்கள் தொகைக்கேற்ப அளவுகோல் நிர்ணயம் செய்து ஒரே சீரான புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும், ஏற்கனவே உள்ள பணியிடங்களை மறுசீரமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், பெருநகர் சென்னை தவிர, இதர மாநகராட்சிகளுக்கான ‘தமிழ்நாடு மாநகராட்சி பணி விதிகள் 1996’ உருவாக்கப்பட்டு, அப்பணி விதிகள் கடந்த 1996 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் போது மாநகராட்சிகளில் தோற்றுவிக்கப்படாத நகராட்சி பணியிடங்களை மாநகராட்சி பணியிடங்களுக்கு இணையாக எவ்வாறு பொருத்துவது என்பது குறித்து பொது அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து புதிய பணியிடங்களள் பணியாளர் பிரிவு, வருவாய் மற்றும் கணக்குப் பிரிவு, பொறியியல் மற்றும் குடிநீர் வழங்கள், பொது சுகாதார பிரிவு ஆகியவை ஆகும். மேலும் மாநகராட்சிகளில் வார்டு அலுவலகம் அமைத்தல், மைய அலுவலகங்களில் மறுசீரமைத்தல் தொடர்பான வரையறைகளை வெளியிடப்பட்டுள்ளது.

 

Categories

Tech |