தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு வங்க கடல் அதனை ஒட்டிய இலங்கை பகுதியில் வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுவதால் இன்று முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் இதை மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.