Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை காண ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தென்காசி, கடலூர் , மயிலாடுதுறை, செங்கல்பட்டு, நாமக்கல், தர்மபுரி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், திருவண்ணாமலை , காஞ்சிபுரம், குமரி, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி ஆகி 20 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |