ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவர்களுக்கான நலத்திட்டங்களையும் ஊக்கத்தொகையும் கொண்டு சேர்க்கும் விதமாக பல திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் இருக்கிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் அவர்களின் எண்ணத்திற்கு உரு கெடுக்கும் விதமாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் 2022 – 2023 ஆம் வருடத்திற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் குடும்ப நிலையை உயர்த்த 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர் சுய உதவி குழுக்கள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்திட பயிற்சிகள் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும் அவர்களுக்கு சேவை சார்ந்த தொழில்கள் அமைக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் தேசிய நவீன ஆடை வடிவமைப்பு நிறுவனம், மத்திய தொழல் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், நெட்வொர்க் தொழில்நுட்ப பயிற்சி மையம் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் பேக்கேஜிங் போன்ற நிறுவனங்களில் ரூபாய் 2.50 கோடி செலவில் பயிற்சிகள் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வேளாண்மை பல்கலைக்கழகம், மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் தேசிய நவீன ஆடை வடிவமைப்பு நிறுவனம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், நெட்வொர்க் தொழில்நுட்ப பயிற்சி மையம் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் பேக்கேஜிங் போன்ற நிறுவனங்கள் மூலமாக2,50,00,000 ரூபாய் செலவில் பொருட்கள் உற்பத்தி செய்யும் பயிற்சி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் அமைக்க தேவையான பயிற்சி வழங்க இருப்பதாக அரசாணை வெளியிட்டு இருக்கிறார்.