தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் சேலம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.நாளை நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மிக கனமழையும் 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
வருகின்ற ஏழாம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் குமரி கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.