தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு மத்தியில் தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் நேற்று சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் போல தேங்கி காட்சியளிக்கிறது. இவ்வாறு தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 21-ம் தேதி வரை பரவலாக மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Categories