தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 22 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வேலூர், ராணிப்பேட்டை, விருதுநகர், மதுரை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்கள் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் வரும் 24-ஆம் தேதி வரை கனமழை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.