தமிழகத்தில் கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர், மதுரை, சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.