Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “220 பொறியியல் கல்லுரிகள்” மூடும் அபாயம்…. ஏ.ஐ.டி.யு.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.டி.யு.சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் இருக்கும் என்ஜினியரிங் கல்லூரியில் ஆண்டுதோறும் ஆய்வு பணிகள்  மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கல்லூரியின் தரம், மாணவர் சேர்க்கை, உள்கட்டமைப்பு போன்றவற்றை கணக்கில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் எடுக்கும். இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான வழிகாட்டுதல்களை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி என்ஜினீயரிங் கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவாக மாணவர் சேர்க்கை இருந்தால் புதிய பாடத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்று அறிவித்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் 220 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 50% குறைவாக மாணவர் சேர்க்கை உள்ளது.  இதன்காரணமாக இந்த கல்லூரிகளில் புதிய படாத்திட்டங்களை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் artificial intelligence, machine learning, cyber security, data science, IO t உள்ளிட்ட வளர்ந்து வரும் பாடங்களை படிக்க விரும்பு கின்றனர். இதனால் சிவில், மெக்கானிக்கல் போன்ற பாடத்திட்டங்களை மட்டும் கொண்டிருக்கும் 220 என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் 100 இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் இனிவரும் காலங்களில் 2 மடங்காக அதிகரிக்கும் தகவல்கள் வெளியாகிறது.

Categories

Tech |