தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தெற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலெழுத்து சுழற்சி நிலவுவதால் இன்றும் நாளையும் தமிழக மற்றும் புதுச்சேரியில் கன மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
Categories