தமிழகத்தில் வளிமண்டல கீழ் எடுக்க சுழற்சி காரணமாக இந்த 23 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் 23 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இன்று திருநெல்வேலியில், மதுரை, விருதுநகர், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், கோவை,நீலகிரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற 22 ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் எனவும் சென்னையை பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள்,மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.