தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதனால் இன்று திருவள்ளூர்,ராணிப்பேட்டை, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். டெல்டா மாவட்டங்கள் வட தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை சேலம், நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கன மழையும், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யும். அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை அதிகரிக்கக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பொது இடங்களில் லேசான மழை பெய்யும். தமிழகத்தில் 24 ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.