Categories
மாநில செய்திகள்

24 சுங்கச்சாவடிகளில்…. நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு…. வாகன ஓட்டிகள் ஷாக்…!!!

தமிழகம் முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 606 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இதில் 5,134 கிலோமீட்டர் சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. மீதமுள்ளவை மத்திய அரசின் நிதியில் மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பதற்காக நாற்பத்தி ஒன்பது இடங்களில் சுங்க சாவடிகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு வருடமும் 8 முதல் 10 சதவீத அளவிற்கு சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள 24 சுங்கச் சாவடிகளிலும் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூபாய் 5 முதல் ரூ.20 வரை இந்த கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு கட்சிகள், ஆம்னி பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் ஆகிய கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |