Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 24 மாவட்டங்களில்…. அடுத்த 3 மணி நேரத்திற்கு…. அலர்ட் அலர்ட்…..!!!!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் 24 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தஞ்சை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், அரியலூர்,திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Categories

Tech |