தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பது குறித்து இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், கல்லூரிகள் திறப்பு, திரையரங்குகள் திறப்பு குறித்தும், கொரோனா மூன்றாவது அலை வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதையடுத்து திரையரங்கள் திறப்பு பற்றி விவாதிக்கப்படும் என்றும், வருகின்ற 27 ஆம் தேதி முதல் திரையரங்கு திறக்கப்படுவதற்காக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.