Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 28 அரசு பள்ளிகளை… தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தும் பணிகள் தொடக்கம்…!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தார் அப்போது அங்குள்ள தகைசால் பள்ளிகள் மாதிரி பள்ளிகளை பார்வையிட்டுள்ளார். இதனை அடுத்து இது போன்ற தமிழகத்திலும் பள்ளிகள் தொடங்கப்படும் என அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் தகைசால் பள்ளிகள் திட்டத்தை கடந்த சட்டம் ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் 28 தகைசால் பள்ளிகளை அதினவின தொழில்நுட்பத்தில் உருவாக்குவதற்காக ரூபாய் 120 கோடியில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தகைசால் பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நவீன கணினிகள் அதிநவீன அறிவியல் ஆய்வகங்கள் ஒருங்கிணைந்த நூலகம் கல்வி சாரா செயல்பாடுகளுக்கான விளையாட்டு கலை, இலக்கியம் போன்ற அனைத்தும் சேர்ந்த ஒரு முழுமையான கல்வியை வழங்குகிறது. இதனால் அனைத்து வகையான திறமைகளுடன் அரசு பள்ளி மாணவ மாணவியர் கல்வி கற்கும் சூழ்நிலை உருவாகிறது. அதற்கு வகுப்பறையில் நேரடியாக பாடங்கள் கற்றுத் தருவது மட்டுமல்லாமல் இணையதளத்திலும் காலத்திற்கு ஏற்ற வகையில் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.

இந்த நிலையில் தாகசால் பள்ளிகள் அமைக்க தேர்வு செய்யப்பட்டிருக்கிற 28 அரசு பள்ளிகள் பெரும்பாலானவை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகள் சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளிகள் தகைசால் பள்ளியாக மேம்படுத்தப்பட இருக்கின்றது. இதே போல பிற பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட இருக்கிறது. இந்த நிலையில் இதற்காக ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சுமார் 6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த தகைசால் பள்ளிகளில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கணினிகள் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள் நவீன ஆய்வகங்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட இருக்கிறது. மேலும் தகைசால் பள்ளிகளில் பாடம் நடத்த இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட இருக்கிறது இந்த வகை பள்ளிகள் மூலமாக அரசு பள்ளிகளில் 62,460 மாணவர்கள் பயன் பெறுகின்றார்கள். தகைசால் பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகள் படிப்படியாக விரிவு படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |