Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 இடங்களில்…. கல்லூரி மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மாணவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி உதவித்தொகை, கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம், விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு இலவச சீருடை, இலவச சைக்கிள், மாதம் ஒன்றுக்கு பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 1000, கல்லூரி மாணவர்களுக்கு 1100 வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2021-22ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான் விவாதத்தின்போது கீழ்காணும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டம் விருத்தாசலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஆகிய 3 இடங்களில் தலா 50 மாணவியர்கள் வீதம் தங்கி பயில ஏதுவாக 3 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர்கள் விடுதிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ரூ.1.6 கோடி செலவில்  கல்லூரி மாணவிகளுக்கு விடுதி அமைக்க நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |