தமிழகத்தில் உள்ள 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவில், திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்றவைகள் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களாக இருக்கிறது. இந்த கோவில்களில் இனி நாள்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.