Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?…. உஷாரா இருங்க…..!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கன்னியாகுமரி,திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை முதல் அதிக கனமழையும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல்,மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது m

Categories

Tech |