தமிழகத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 12-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில் உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது.
இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிராமப்புறம் மற்றும் நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முன்னதாக இன்று முதல் வாக்குப்பதிவு நாளான ஒன்பதாம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான 12 ஆம் தேதியும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.