Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை…. 610 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்து துறை அதிரடி….!!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது . எனவே அன்றைய தினம் பொது விடுமுறை ஆகும். இதனிடையே இன்றும் நாளையும் வார இறுதி விடுமுறை வருவதால் இன்று முதல் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை நாட்களாக உள்ளது . இதனால் சென்னையில் பணியாற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.

சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.அதன்படி இன்றும் நாளையும் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்து துறை இயக்குகிறது.அது மட்டுமல்லாமல் விடுமுறை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப ஏதுவாகவும் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Categories

Tech |