Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாள் பொதுவிடுமுறை…. இந்த நாளும் லீவு விடுங்க…. அரசு ஊழியர்கள் கோரிக்கை …!!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவதால் மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வருகின்றனர். அதுமட்டுமின்றி காலாண்டு விடுமுறையும், பண்டிகைக்காக அரசு விடுமுறையும் சேர்ந்து வருகிறது. எனவே பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வருகின்றனர். ஆனால் அரசின் பொது விடுமுறையில் மூன்று நாட்கள் விடுமுறையில் இடையில் திங்கள்கிழமை வேலை நாள் இருப்பதால் அரசு ஊழியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாளை அக்.2ஆம் தேதி காந்தி ஜெயந்தி பொதுவிடுமுறை ( ஞாயிறு வார விடுமுறை), அக்.3ஆம் தேதி திங்கட்கிழமை வேலை நாட்கள், அதனைத் தொடர்ந்து அக்.4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆயுதபூஜை, அக். 5ஆம் தேதி புதன்கிழமை விஜயதசமி ஆகிய 2 நாட்கள் அரசு பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது. திங்கள் மட்டும் இடையில் வேலை நாளாக வருவதால், அன்றும் விடுமுறை அளிக்க வேண்டும் என முதல்வருக்கு அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Categories

Tech |