Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு…. பேரிடர் மேலாண்மை ஆணையம் கடும் எச்சரிக்கை….!!!

விழுப்புரம் கடலூர் மற்றும் புதுவைக்கு பேரிடர் மேலாண்மை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் அந்தப் பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கனமழை எச்சரிக்கை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் விழுப்புரம், கடலூர் மற்றும் புதுவையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அந்த பகுதிகளில் அடுத்த 6 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |