தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.அதன் எதிரொலியாக தமிழகத்திலும் கனமழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.
இந்நிலையில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று நெல்லை,குமரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், தென்காசி,விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.