Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மாலை ஆர் எஸ் எஸ் பேரணி… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்….!!!!!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று மாலை ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மாலை மூன்று மாவட்டங்களில் ஆர் எஸ் எஸ் பேரணிகள் நடைபெற இருக்கின்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறையின் உத்தரவுகளை எதிர்த்து ஆர் எஸ் எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50ற்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இன்று ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை என காவல்துறைக்கு எதிராக ஆர் எஸ் எஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் தமிழ்நாட்டின் 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு நேற்று அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து சுற்றுச்சுவர் அமைந்திருக்கும் மைதானங்களில் மட்டும் ஆர் எஸ் எஸ் பேரணி நடத்த வேண்டும் என 11 நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து கடலூர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி இன்று மாலை நடைபெறுகிறது.

இதற்கு கடலூர் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். மேலும் பேரணி தொடங்க இருந்த இடமான திருப்பாதிரிபுலியூர் பெரிய கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடலூர் மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இதே போல் கள்ளக்குறிச்சி பெரம்பலூரிலும் இன்று மாலை ஆர் எஸ் எஸ் அமைப்பினர் பேரணி நடைபெற இருக்கின்ற நிலையில் அந்த பகுதிகளிலும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

Categories

Tech |