தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று இரவு முதல் சுமார் 30 மணி நேரத்திற்கு மேல் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை 24 மணி நேர முழு ஊரடங்கு என மொத்தம் 30 மணி நேரத்திற்கு மேல் லாக்டவுன் போடப்படுகிறது. வெளியூர் சென்றவர்கள் இரவுக்குள் சொந்த ஊருக்கு திரும்பி விடுங்கள். அத்தியாவசிய பொருள்களை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என அரசு அறிவுறுத்தியுள்ளது.