நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா கட்டுக்கடங்காமல் செல்வதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் பெரிய பெரிய அங்காடிகள், ஷாப்பிங் மால்கள் , உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள், சலூன் கடைகள் ஆகியவை இயங்க அனுமதி இல்லை. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவு வெளியாகியுள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.