Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 38% மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை பயின்று வருகிறார்கள். மாணவர்களின் நலன் கருதி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பள்ளிகள் திறப்பது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் 38 சதவீதம் மாணவர்கள் சத்துணவு இல்லாமல் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிபடுகின்றனர் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்கள் நடத்திய ஆய்வில் 11 சதவீதம் மாணவர்கள் மேல் வகுப்புக்கு செல்லாமல் இடை விலகியுள்ளனர் என்றும் 51 சதவீதம் பேருக்கு ஆன்லைன் வகுப்பு கிடைக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது

Categories

Tech |