தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் இடைவெளியைப் போக்குவதற்காக வீடு தேடிச் சென்று கல்வி கற்பிக்கும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்ற தன்னார்வலர்களை பள்ளிக்கல்வித்துறை எதிர்பார்க்கிறது. அதனைப் போலவே இந்த திட்டத்திற்கு லோகோ வடிவமைப்பு குறித்த அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பயிற்சி பணிமனை, விழிப்புணர்வு கலைப்பயணம், தன்னார்வலர்களுக்கான இணையதளத்தை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்
தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சேவையாற்ற விருப்பமுள்ள 38 மாவட்டத்திலுள்ள தன்னார்வலர்கள் illamthedikalvi. tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலமும் பதிவு செய்யலாம். இந்தத் திட்டத்தின் நோக்கம் செயல்பாடுகள் அனைத்தையும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களிடையே கொண்டு சேர்ப்பது அவசியமாகும்.