தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் இருபத்தி ஒன்றாம் தேதி முதல் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 6 சென்டிமீட்டர், ஏேதா கோட்டை மற்றும் வால்பாறையில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Categories