Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மூன்று நாட்களுக்கு முன்னரே தொடங்கி விட்டது. அதனால் தமிழகத்தில் இயல்பான மழை கிடைக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகளவு மழை பொழிவை தரக்கூடிய தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்குவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டில் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மே 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி விட்டது.

வழக்கத்தை விட மூன்று நாட்களுக்கும் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும் நடப்பாண்டில் மழைப்பொழிவு என்பது இயல்பாக தான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல்,கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |