Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு தொடர் மழை….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு வட தமிழகம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |