Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு…. 14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை,காஞ்சி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |