தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.