Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை….. 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் புனித வெள்ளி, ஈஸ்டர் மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து 1000 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் இந்த  வார இறுதியில் 4 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எடுபுடி அதனால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல கூடும் என்பதால் கூடுதலாக 1000 சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு, 15ஆம் தேதி புனித வெள்ளி மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவிற்காக அரசு விடுமுறையும், தொடர்ந்து 16 மற்றும் 17 சனி ஈஸ்டர் பண்டிகையை விடுமுறை தொடர்ந்து வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்க விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 16 ஆம் தேதி சித்ரா பவுர்ணமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு செல்வது வழக்கம். பண்டிகை மற்றும் சிறப்பு தினங்கள் தொடர்ச்சியாக வருவதால் பொதுமக்களின் பயண தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக 1000 சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |