தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை நள்ளிரவு வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை நள்ளிரவு வரையிலும், 2 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.