அண்டை மாநிலமான கேரளாவில் முதன் முதலாக குரங்கம்மை தொற்று பாதிக்கப்பட்டது. இதனால் பரவிவிடகூடாது என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்திலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும் தமிழகத்தில் ஒருவருக்கு கூட குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அறிகுறியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பரிசோதனை முடிந்து வந்தால்தான் அவர்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதா என்பது உறுதி செய்யப்படும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.