வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு சில இடங்களில் கனமழை அறிக்கையை வானிலை மையம் வெளியிட்டது.
அதன்படி தற்போது தேனி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்து ஜனவரி 5ஆம் தேதி முதல் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவித்துள்ளது.