Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று (ஜூலை 28) பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் அதிலும் தமிழகத்தில் இன்று நடைபெறுகிறது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தொடங்கும் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி மற்றும் முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை முழுவதும் திருவிழா போல ஜொலிக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அனைவரும் சென்னை வருகை தருகின்றன.

அதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படும். எனவே இன்று இந்த நான்கு மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசு துறைகள் தவிர மற்ற அரசு துறைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனை ஈடு செய்யும் விதமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 27ஆம் தேதி சனிக்கிழமை பள்ளி கல்லூரிகள் இயங்கும் என அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |