தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிக் கொண்டிருப்பதால் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.