தமிழகத்தின் அரசு பள்ளிகளில் 4,5ஆம் வகுப்புகளில் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு தினந்தோறும் அரை மணி நேரம் பிரத்தியேக பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சி அளிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்ய அடிப்படை திறனாய்வு மதிப்பீட்டு தேர்வு 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட நிலையில் அதில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் 10 முதல் 15 சதவீதம் பேர் கற்றலில் பின் தங்கியுள்ளனர்.
இந்த மாணவர்கள் அனைவரும் மொழிபாடத்தில் முழுமையாக எழுத்துக்களை அறியாததால் எழுதவும் வாசிப்பதற்கும் மிகவும் சிரமப்படுகின்றன. அதனால் ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலையில் உள்ள நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தினமும் பள்ளி நேரத்தில் அரை மணி நேரம் கற்றல் குறைபாடு உடைய மாணவர்களுக்கு இந்த பயிற்சி வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.