கோவை மாவட்டம் கிணத்துக் கடவு பேரூராட்சியிலுள்ள குழந்தைகள் மையத்திற்கு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று திடீரென்று வந்தார். அப்போது அவரை சிறுமிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து அவர் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட உணவுகளை ஆய்வு மேற்கொண்டு சாப்பிட்டு பார்த்தார். அத்துடன் குழந்தைகளுக்கும் மதிய உணவு பரிமாறினார். அதன்பின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு சாப்பாடு எப்படி இருக்கிறது என மாணவ -மாணவிகளிடம் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து சிங்கராம்பாளையம் பிரிவிலுள்ள சரணாலயத்தில் ஆதரவற்ற, உடல் ஊனமுற்ற குழந்தைகளை பார்த்து நலம் விசாரித்தார். முன்பாக அமைச்சர் கீதா ஜீவனை கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல், பேரூராட்சி தி.மு.க. செயலாளர் கனகராஜ், பேரூ ராட்சி துணைத் தலைவர் பாலகுமார் போன்றோர் வரவேற்றனர்.
அதன்பின் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது “குற்றவழக்குகளில் கைதாகும் இளம் சிறார்களை எவ்வாறு கையாள வேண்டும். அவர்களின் கல்வி, எதிர்காலம் பாதிக்ககூடாது. மேலும் அவர்களின் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு நேயமான சூழலை உருவாக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கோவை மண்டலத்தில் காவல்துறை அதிகாரிகள், குழந்தைகள் நலக்குழு, ஜூனியர் ஜூடிசியல் போர்டு உறுப்பினர், மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் போன்றோருக்கு 3 நாள் பயிற்சி தொடங்கியுள்ளது. 2 பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 2வது குழந்தைக்கு 3 வயதாகும் போது பதிவு செய்ய வேண்டும்.
முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 40 ஆயிரம் பிள்ளைகளுக்கு நிதி பெற்று கொடுத்துள்ளோம். குழந்தைகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் முகவரி மாற்றம், வங்கி கணக்கு வழங்காதது ஆகியவற்றால் தாமதம் ஏற்படுகிறது. தவறான முகவரி பற்றி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வாயிலாக அறிவுறுத்தி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 18 வயது நிரம்பியவர்களுக்கு முதிர்வு தொகை வழங்கப்படுகிறது. காலை சிற்றுண்டி திட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வரலாற்று சிறப்பு மிக்க திட்டம் ஆகும். அதனை உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக செயல்படுத்த வேண்டும். இதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு பிரதிநிதித்துவம் கொடுப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்” என்று அவர் பேசினார்.