தமிழகத்தில் கொரோனா காரணமாக அரசு துறைகளில் இருந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாகப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதில் முதல் தாள் வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றது.இதனை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை இழந்த நிலையில் இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதன்படி தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக பாடத்திட்டம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு மாநில கல்வி கொள்கை வகுக்க குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் கௌரவ விரிவுரையாளர் பணியிடத்தில் காலியாக உள்ள 1895 பணியிடங்களை நிரப்ப முதல் பஸ்ட் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார்.அதன்படி இந்த காலி பணியிடங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவு வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.