தமிழகத்தில் 42 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த வருடம் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டு தீ சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வனத் துறை தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெயில் இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது.
இவ்வகையில் கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம், வேலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 42 மாவட்டங்களில் காட்டுதீ ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் மக்கள் அனைவரும் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.