தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையிலான பல பரிசுகளும் வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து தடுப்பூசி செலுத்தி கொள்பவருக்கு குலுக்கல் முறையில் பரிசுகளை வழங்கியது. அதனால் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்ற தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 32 ஆயிரம் மையங்களில் ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதில் 22,52,641 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 4 ஆம் மெகா தடுப்பூசி முகாமில் 17,04,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.