Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் 5  ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு  உத்தரவிட்டுள்ளார். அதன்படி கலை மற்றும் கலாச்சாரத்துறை கமிஷனராக இருந்த கலையரசி ஐ.ஏ.எஸ்., தற்போது அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத்துறைக்கான சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு துணை கலெக்டர் ப்ரதிக் தயாள் ஐ.ஏ.எஸ்., அரசு நிதித்துறை இணைச் செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதீப் குமார் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு நீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் கூடுதல் மேலாண் இயக்குநராகவும்,சிதம்பரம் துணை வட்டாட்சியராக இருந்த மதுபாலன் ஐ.ஏ.எஸ்., ஈரோடு மாவட்டத்தின் கூடுதல் கலெக்டராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |